Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறம்பொட ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தில் வருடாந்த மோதிர திருவிழா

In ஆன்மீகம்
Updated: 10:46 GMT, Mar 14, 2016 | Published: 10:46 GMT, Mar 14, 2016 |
0 Comments
1190
This post was written by : Varothayan

இறம்பொட ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தில் வருடாந்த வருஷாபிஷேக மோதிர திருவிழா எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனித் திங்கள் 5ம் நாள் (18.03.2016) தசமி திதியும், புனர் பூச நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய நன்நாளில் திருவிழா ஆரம்பமாகி, தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

17ஆம் திகதி மாலை சாந்தி வழிபாடும் 18 ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை தினமும் காலை 9.00 மணிக்கு அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் (109), நண்பகல் 12.00 மணிக்கு விஷேட வசந்த மண்டப பூஜையுடன் சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா என்பன நடைபெற்று, பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

24ஆம் திகதி மோதிரத் திருவிழா நடைபெற்று விழா இனிதே நிறைவு பெறும். இந் திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு ஸ்ரீ பக்த ஹனுமானின் அருளை பெற்றேகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

001 (2) 02

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg