Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவராத்திரி அன்று வெளியாகிய ‘ருத்ரன்’ பக்திப்பாடல்

In
Updated: 11:06 GMT, Mar 14, 2016 | Published: 11:06 GMT, Mar 14, 2016 |
0 Comments
1703
This post was written by : Varothayan

சிவனின் பெருமையைப் போற்றும் விதத்தில் ‘ருத்ரன்’ என்ற காணொளிப்பாடல் (Lyrical Video) கடந்த சிவராத்திரி தினத்தன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஈழத்தில் இருந்து பல்வேறுபட்ட காணொளிப்பாடல்கள் அண்மைய காலங்களில் வெளியிடப்பட்டு வரும் நிலையில், இளைஞர்கள் சிலரின் வித்தியாசமான முயற்சியில் இந்தப் பக்திப் பாடல் வெளியாகியுள்ளது.

காணொளிப்பாடலாக வெளியாகவுள்ள ‘ருத்ரன்’ தற்போது Lyrical Video ஆக இணையத்தில் வெளிவந்துள்ளது. விரைவில், அதன் காணொளியையும் கண்டுகளிக்கலாம் என, பாடல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப்பாடலுக்கான வரிகளை நவ பிரணவன் எழுதியுள்ளதுடன், ஜமேந்திரன் இசையமைத்துள்ளார். ஜமேந்திரன், பிரணவன், நந்தகுமார், கெனத் ப்ரெட்ரிக், சுதர்சன் ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

ரொக் ஸ்ரூடியோ சார்பில் இந்தப் பாடலுக்கான படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவினை அமலேஷ்கர் செய்து வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg