Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் கார் ஏற்றுமதியில் சரிவு

In வணிகம்
Updated: 06:13 GMT, Mar 15, 2016 | Published: 06:12 GMT, Mar 15, 2016 |
0 Comments
1134
This post was written by : Shailu

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் பெப்ரவரி வரையிலான கால அளவில், இந்தியாவின் பயணிகள் கார் ஏற்றுமதி 3.71 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சரிவானது, 4,84,602-ஆக உள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அல்ஜீரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் கார் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், அல்ஜீரியாவில் தொழில்நுட்ப விதிமுறைகள் மாற்றிய அமைக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுக்கான கார் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.

மேலும், இலங்கையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு விதிக்கப்படும் வரி அதிகமாக உள்ளதால், இதுவும், இந்திய கார் ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

சொகுசு வகை கார் ஏற்றுமதிக்கு முக்கிய சந்தையாக ஐரோப்பா உள்ளதால், அந்நாடுகளுக்கான கார் ஏற்றுமதி மந்த நிலையிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது.

இது, உள்நாட்டு கார் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது என்று இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg