Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறைவடைந்துள்ள இங்கிலாந்தின் வேலையின்மை

In வணிகம்
Updated: 12:15 GMT, Mar 16, 2016 | Published: 12:15 GMT, Mar 16, 2016 |
0 Comments
1247
This post was written by :

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்து இவ்வருடம் ஜனவரி வரையிலான காலப்பகுதியில் இங்கிலாந்தின் வேலையின்மை அளவு 1.68 மில்லியன் ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அந்நாட்டின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த வேலையின்மை அளவு குறைவானது, கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 28,000 வேலையின்மைகள் நீங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது 5.1 சதவீதமானவர்களே இங்கிலாந்தில் வேலை இல்லாமல் இருக்கின்றனர். இது இந்த தசாப்தத்தின் மிகவும் குறைவான வேலையின்மை பதிவாக உள்ளது.

தற்பொழுது இங்கிலாந்தில் 31.42 பில்லியன் மக்கள் தொழில் புரிகின்றனர். கடந்த வருடத்தை விட இவ்வருடம் 478,000 பேர் அங்கு புதிதாக தொழிலில் இணைந்துள்ளனர். தற்பொழுதுள்ள தொழில் வாய்ப்பு அதிகரிப்பானது, கடந்த 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் அடைந்துள்ள மிக உயர்ந்த அளவு அதிகரிப்பு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று இங்கிலாந்து மக்களின் வருமானமும் முன்பை விட அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்த்க்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg