Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனா – நேபாளம் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம்

In வணிகம்
Published: 16:57 GMT, Mar 17, 2016 |
0 Comments
1227
This post was written by :
China and nepal

சீனாவிடம் இருந்து நேபாளத்திற்கு எரிபொருள் இறக்குமதி செய்வது தொடர்பான ஒப்பந்தமொன்று கையெழுத்தாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகளிடையேயான வர்த்தகம், போக்குவரத்து தொடர்பாக ஒப்பந்தமொன்று கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேபாள பிரதமர் கே.பி.ஒலி இம்மாதம் 20ஆம் திகதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்போது முதல் ஒரு வாரம் அவர் அங்கு இருப்பார். இதன்போதே குறித்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகவுள்ளன.

இது தொடர்பில் நேபாள தொழில்துறை அமைச்சர் சோம் பிரசாத் பாண்டே கூறுகையில், ‘பிரதமரின் சீனப் பயணத்தின்போது வர்த்தகம், போக்குவரத்து மற்றும் எரிபொருள் இறக்குமதி தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

எண்ணெய் ஆய்வு தொடர்பாக நேபாளத்திற்கு உதவி செய்வதாக சீனா ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும். பொகாராவில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது, ஹூம்லா மாவட்டத்தை திபெத்துடன் இணைக்கும் சிமிகோட்-ஹில்சா வீதியில்யில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்’ என்று குறிப்பிட்டார்.

நேபாளத்தின் புதிய அரசியலமைப்புக்கு எதிராக மாதேசி இனத்தவர்கள் 5 மாத காலமாக போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக இந்தியாவுடனான வர்த்தகம் முடங்கி, பெட்ரோலிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg