Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன் மற்றும் மீன் உற்பத்தி பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பு

In வணிகம்
Updated: 17:18 GMT, Mar 17, 2016 | Published: 17:16 GMT, Mar 17, 2016 |
0 Comments
1234
This post was written by :

கடந்த ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்தி பொருட்களின் மொத்த அளவு ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 607 மெட்ரிக் டொன்னாக இருந்துள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரிப்பாக உள்ளது.

2014ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்திப் பொருட்களின் மொத்த அளவு 78,712 மெட்ரிக் டொன்னாக இருந்துள்ளது. குறித்த பொருட்களின் தேவைப்பாடு கடந்த ஆண்டு மிகவும் அதிகமாக இருந்தமையே இதற்கான காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்றொழில் அமைச்சகம் விடுத்துள்ள தகவலின்படி, கடந்த வருடத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கருவாட்டின் அளவு 8,445 மெட்ரிக் டொன்னாகவும் நெத்தலி கருவாட்டின் அளவு 24,607 மெட்ரிக் டொன்னாகவும், மாசியின் அளவு 2,216 மெட்ரிக் டொன்னும் இருந்துள்ளது. அதே போல், இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுக்காக எடுக்கப்படும் மீனின் அளவு 33,867 மெட்ரிக் டொன்னாகவும் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg