Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மென்பானங்கள் மீது புதிய இனிப்புவரி அறிமுகம்

In வணிகம்
Updated: 15:19 GMT, Mar 18, 2016 | Published: 15:18 GMT, Mar 18, 2016 |
0 Comments
1241
This post was written by : Anojkiyan

பிரித்தானிய அதிபர் ஜோர்ஜ் ஒஸ்போர்னினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவு திட்டத்தில் இனிப்பு மென்பானங்கள் மீது புதிய  வரி விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பருவத்தில் உடல் பருமனை குறைக்கும் நோக்கில் இந்த புதிய இனிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வரியானது எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் அமுல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பில் இனிப்பான மென்பானங்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. இந்நிலையில், 100 மில்லிலீட்டர் பானத்தில் ஐந்து கிராமிற்கு அதிகமான சீனி சேர்க்கப்பட்டிருப்பின் இந்த வரி விதிக்கப்படும் என ஜோர்ஜ் ஒஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அடுத்து மென்பான தயாரிப்பாளர்களின் பங்குகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இதற்கு சுகாதார நிபுணர்கள் பெரும் வரவேற்பளித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg