Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி மார்ச் இல் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 06:35 GMT, Mar 19, 2016 | Published: 06:35 GMT, Mar 19, 2016 |
0 Comments
1274
This post was written by : Anojkiyan

நடப்பு மார்ச் மாதத்தில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி 50 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்க ஆபரண விற்பனையாளர்களின் தொடர் போராட்டமே இதற்கு காரணம் என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

2016-17 ஆண்டுக்கான மத்திய வரவுசெலவுத் திட்டத்தில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது சிறப்பு பொருளாதார மண்டலங்கள் வாயிலாக குறைந்த அளவில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. எனினும், ஒட்டுமொத்த அளவில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி சென்ற ஆண்டு மார்ச் மாதத்தைக் காட்டிலும் 50 சதவீதம் சரிவடையும் நிலை உள்ளது என நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg