Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளுக்கு ஏப்ரலில் உர நிவாரணம்

In வணிகம்
Updated: 06:40 GMT, Mar 19, 2016 | Published: 06:38 GMT, Mar 19, 2016 |
0 Comments
1221
This post was written by : Anojkiyan

விவசாயிகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதிக்குள் உரம் பெற்றுக்கொள்வதற்காக நிதி வழங்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

இதனூடாக விவசாயிகளுக்கு தமக்கு தேவையானவாறு இரசாயண பசளையோ இயற்கை பசளையோ பெறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பசளை நிவாரணங்கள் தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராயவென பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உர மானியத்தின் கீழ் உரம் வழங்குவதங்கு பதிலாக உரத்திற்கான பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg