Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மங்கலகரமான வாழ்வருளும் ஸ்ரீமகாலக்ஷ்மி

In ஆன்மீகம்
Updated: 10:37 GMT, Mar 22, 2016 | Published: 10:36 GMT, Mar 22, 2016 |
0 Comments
1325
This post was written by : Risha

ஸ்ரீஆதிலக்ஷ்மி, ஸ்ரீதான்யலக்ஷ்மி, ஸ்ரீதைரியலக்ஷ்மி, ஸ்ரீகஜலக்ஷ்மி, ஸ்ரீசந்தானலக்ஷ்மி, ஸ்ரீவிஜயலக்ஷ்மி, ஸ்ரீவித்யாலக்ஷ்மி, ஸ்ரீதனலக்ஷ்மி என்ற அஷ்டலக்ஷ்மியருக்கு ஒவ்வோர் சிறப்புண்டு.

அந்தவகையில் மங்கலகரமான வாழ்வு அமைய வேண்டுமாயின் ஸ்ரீமகாலக்ஷ்மியை மனதார பிரார்த்திக்க வேண்டும் என்பது முன்னோரின் ஐதீகம்.

அதேவேளை, உடல்நலம்பெற ஸ்ரீஆதிலக்ஷ்மியையும், பசிப்பிணி நீங்க ஸ்ரீதான்யலக்ஷ்மியையும், மனதில் தைரியம் பெற ஸ்ரீதைரியலக்ஷ்மியையும், சௌபாக்கியம் பெற ஸ்ரீகஜலக்ஷ்மியையும், குழந்தைவரம் வேண்டுவோர் ஸ்ரீசந்தானலக்ஷ்மியையும் காரியத்தில் வெற்றி கிடைக்க ஸ்ரீவிஜயலக்ஷ்மியையும் கல்வியும் ஞானமும் பெற வித்யாலட்சுமியையும், சகல ஐஸ்வரியங்களும் பெருக ஸ்ரீதனலக்ஷ்மியையும் வணங்கி பலன் பெறலாம்.

மேலும் இந்த அஷ்டலக்ஷ்மி தேவியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, புடவை சார்த்தி வணங்கினால் வீட்டில் சுபிட்சம் நிலவும்! என்பது ஐதீகம். அதேவேளை, செவ்வாய்க்கிழமைகளில் மகாலக்ஷ்மித் தாயாருக்கு செவ்வரளி மாலை சார்த்தி வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களும் கிட்டும்.

இவ்வாறு அஷ்டலக்ஷ்மி தேவியரையும் ஒரே தலத்தில் கொண்ட ஆலயமாக சென்னை அடையார் அருகில் அழகுற அமைந்துள்ளது ஸ்ரீஅஷ்டலக்ஷ்மி ஆலயம் காணப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg