Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைதராபாத் பிரியாணி

In
Updated: 11:14 GMT, Mar 22, 2016 | Published: 11:12 GMT, Mar 22, 2016 |
0 Comments
1363
This post was written by : Risha

தேவையான பொருட்கள் 

மட்டன் – 1 கிலோ,
பாஸ்மதி அரிசி – 1 கிலோ,
இஞ்சி – சிறிய துண்டு,
முழு பூண்டு – 2
கறிவேப்பிலை – 2 கொத்து
நறுக்கிய புதினா இலை – 1 கப்,
பச்சை மிளகாய் – 10
லவங்கம் – 4,
பட்டை – 2 துண்டு
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
ஜாதிக்காய் – லு டீஸ்பூன்
பால் – 8 டீஸ்பூன்
குங்குமப்பூ – 1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 3 (பெரியது)
எலுமிச்சை சாறு – 1 பழத்தின் சாறு
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
தயிர் – 200 கிராம்
வேக வைத்த முட்டை – 3
உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசியையும் மட்டனையும் நன்கு கழுவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, புதினா, பச்சை மிளகாய் நான்கையும் நன்கு அரைத்துக் கொள்ளவும். வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை ஊற வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கி பிறகு அதனுடன் லவங்கம், பட்டை, பெருஞ்சீரகம், ஜாதிக்காய் என்பவற்றை நன்கு வதக்கி சுத்தம் செய்த மட்டன், உப்பு, அரைத்து வைத்த விழுது, தயிர், மிளகாய்ப் பொடி எல்லாவற்றையும் வதக்கி நன்கு அரைமணி நேரம் வேகவிடவும்.

பிறகு தனியே ஒரு வாணலியில் நெய்யை சூடாக்கி, வெந்த மட்டன் கலவையை அதோடு சேர்த்து 40 முதல் 45 நிமிடம் வரை மிகவும் குறைவான தீயில் வேகவிடவும். வெந்து கொண்டிருக்கும் இந்தக் கறிக் கலவையை அவ்வப்போது கிளறி விடவும். இந்த குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.

குக்கரில் சாதத்தை சற்று உதிர் உதிராக வடிக்கவும். இந்த சாதத்தை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் முதலில் பாதி அளவிற்கு சாதத்தைப் போட்டு அதன் மேல் மட்டன் கிரேவியை சீராக ஊற்றி, மீண்டும் சாதத்தைப் போடவும். பிறகு மீண்டும் கிரேவி போடவும். பாலில் ஊற வைத்த குங்குமப் பூவையும் இதில் போட்டு சரியான மூடியில் இறுக்கமாக மூடி விடவும். இதை மைக்ரோவேவ் அவனில் 1800 டிக்ரிக்கு 15 நிமிடம் வைத்து பேக் செய்தால் பிரியாணி தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg