Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீங்களும் கொடி இடை அழகியாக ஒரு உடற்பயிற்சி

In
Updated: 11:43 GMT, Mar 22, 2016 | Published: 11:43 GMT, Mar 22, 2016 |
0 Comments
1259
This post was written by : Risha

இடுப்பு குறைந்து கொடி இடையை பெறுவதற்கு படுக்கையை விரித்து அதில் வலது புறம் திரும்பி படுக்கவும். வலது கையை தலைக்கு மேல் நீட்டவும், இடது கையை வயிற்றின் முன்பகுதியில் ஊன்றியபடி வைக்கவும்.

வலதுகாலின் மீது இடதுகால் இருக்குமாறு வைத்து, அதே நிலையில் மெதுவாக இடதுகாலை 45 டிகிரி அளவிற்கு உயர்த்தவும். இருபது எண்ணும் வரை மேலே உயர்த்தியவாறு இருக்கவும்.

பின்னர் மெதுவாக வழமையான நிலைக்கு வந்து, பின்னர் இதேபோல் இடது பக்கம் திரும்பி படுத்து வலது காலை உயர்த்தவும். இவ்வாறு செய்வதால் தொடை, இடுப்பு பகுதிகள் ஒரு வடிவத்திற்கு வரும்.

அதுமட்டுமின்றி ஜன்னலைப் பிடித்துக் கொண்டு இடுப்பைத் திருப்ப வேண்டும். கால்களுக்குக் கீழே பவுடரைப் போட்டு வட்டமாகத் திருப்பினால் இடுப்பும் சரியான முறையில் அமையும். இதுபோன்று தினசரி செய்து வந்தால் கொடியிடையைப் பெறலாம்.

அதேவேளை புளிப்பான உணவு வகைகளை தவிர்த்தல் உகந்ததாகும். புளிப்பான பொருட்களான புளித்த தயிர், புளிக்குழம்பு போன்றவைகளை சாப்பிடக் கூடாது, அதேபோல் ஊறுகாயும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளை தவிர்த்து விடவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், அன்னாசிப் பழம் கொழுப்பை கரைக்கும் என்பதால், அன்னாசிப் பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து வேகவைத்து வடிகட்டி குடித்து வந்தால் இடுப்பு சதை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg