Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கால சர்ப்ப தோஷத்திற்கு கால பைரவ வழிபாடு

In ஆன்மீகம்
Updated: 12:06 GMT, Mar 22, 2016 | Published: 12:06 GMT, Mar 22, 2016 |
0 Comments
1304
This post was written by : Risha

கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும். இந்த வழிபாடுகளை மேற்கொண்டால் கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் கிட்டும்.

ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கு நடுவில் ஏனைய ஏழு கோள்களும் வானில் இருக்கும் நிலையை சர்ப்பகாலம் என்றும், அந்த காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளை கால சர்ப்த்தில் பிறந்தவர்கள் என்றும் முன்னோர்கள் குறிப்பிடுவர்.

ஒருவரது ஜாதகத்தில் உள்ள லக்னத்தில் தொடங்கி, ஏழு வீடுகளுக்குள் தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியும், ஏழாம் வீட்டில் தொடங்கி, லக்னத்தில் முடிபவர்களுக்கு வாழ்கையின் பிற்பகுதியும் சிக்கலாக அமையும்.

சிக்கல் என்பதற்குள் திருமண வாழ்க்கை தடங்கல், வேலையின்மை, தீய- கொடிய பழக்கங்களுக்கு ஆளாதல் மற்றும் பிறரால் ஒதுக்கப்படல் ஆகிய நிலைமைகளும் ஏற்படலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg