Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா

In ஆன்மீகம்
Updated: 16:29 GMT, Mar 22, 2016 | Published: 13:23 GMT, Mar 22, 2016 |
0 Comments
1371
This post was written by : Varshini

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா, அடியார்கள் புடைசூழ இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, இம் மாதம் 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து பல விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வந்த நிலையில், இன்று தேர்த் திருவிழா நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்ததோடு, இரத பவனிக்கு முன்னால், சிறுவர்களின் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

திருவிழாவின் இறுதி நிகழ்வாக, நாளைய தினம் தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg