Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாய் மற்றும் பல் சுகாதாரம்

In
Updated: 05:35 GMT, Mar 23, 2016 | Published: 05:35 GMT, Mar 23, 2016 |
0 Comments
1284
This post was written by :

பற்களினதும், வாயினதும் பெறுமதி எமக்கு வலி ஏற்பட்டால்தான் விளங்கும். எனினும் சாதாரண நேரங்களில் நாம் வாயையும் பற்களையும் பராமரிப்பதற்கு அதிகமாக தவறிவிடுகின்றோம்.

வயிறு சுத்தமாக இல்லாதவர்கள், வாயுத்தொல்லை உள்ளவர்கள், அடிக்கடி ஏப்பம் விடும் பிரச்சினை உள்ளவர்களுக்கும் வாய் துர்நாற்றம் வரும். சாப்பிடும் போது ஈறுகளில் மாட்டிக்கொள்ளும் உணவுகளை அப்படியே விட்டாலும் துர்நாற்றம் வீசும். மூன்று நாட்களுக்குள் பற்கள், ஈறுகளுக்கு இடையே சிக்கிய உணவுத் துணுக்கை எடுக்காவிட்டால் நாள்போக்கில் அது காரையாக மாறி பற்களில் படிந்துவிடும்.

சிலருக்கு தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடிக்கும் பழக்கம் இருக்கும். அவ்வாறானவர்கள் பல் வைத்தியரிடம் காட்டி, அவர்கள் கூறும் விதத்தில் மருத்துவத்தை மேற்கொண்டு வந்தால், அந்த பிரச்சினையிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

தினமும் குடழளளiபெ எனப்படும் முறையில் இரு பற்களுக்கு இடையில் மெழுகு தடவப்பட்ட மெல்லிய நூலை செலுத்தி மேலும் கீழுமாக மெதுவாக இழுக்கும்போது அங்குள்ள உணவுத் துகள்கள், அழுக்குகள் வெளியேற்றப்படும்.

கோப்பி, தேநீர், கிரீன் டீ போன்றவற்றை அதிகம் குடித்தல், புகைத்தல் பாவனையும் பற்களில் கறையை ஏற்படுத்தும். எனவே இவ்வாறான நடவடிக்கைகளையும் தவிர்ப்பது வாய் மற்றும் பற்களின் சிறந்த சுகாதாரத்திற்கு உதவி புரியும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg