Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அகலமான தோள்பட்டையைப் பெற சிறந்த உடற்பயிற்சி

In
Updated: 05:47 GMT, Mar 23, 2016 | Published: 05:46 GMT, Mar 23, 2016 |
0 Comments
1274
This post was written by :

உடலைவிட தோள்பட்டைகள் அகன்றிருந்தால், வித்தியாசமான ஒரு அழகைப் பெறலாம். சிலரது உடல் அளவிற்கு ஏற்ற தோள்பட்டை இல்லாமல் இருத்தல் அவர்களது உடல் அழகில் மாற்றத்தை ஏற்படுத்தும். அகலமான தோள்பட்டையைப் பெறுவதற்கு மேற்கொள்ளும் ஒரு சிறந்த உடற்பயிற்சி குறித்து பார்ப்போம்.

டம்பெல்ஸ் பயன்படுத்திச் செய்யக்கூடிய பயிற்சி இது. கைகளில் சற்று எடை குறைந்த டம்பெல்ஸை எடுத்துக்கொண்டு, நேராக நிற்க வேண்டும். இப்போது டம்பெல்ஸைப் பக்கவாட்டில் தோள்பட்டை அளவுக்கு உயர்த்த வேண்டும். இந்த நிலையில் உங்கள் கைமுட்டியை சற்று மடக்கிவைக்க வேண்டும்.

சில நொடிகளில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதனை ஆரம்பத்தில் 15 முறையும் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். பெண்களுக்கும் இந்த பயிற்சி நல்ல பலனை அளிக்கும்.

வெளித் தோள்பட்டை சதை வலுவடையவும், தோள்பட்டை அகலமானதாகக் காட்டவும். இந்தப் பயிற்சி உதவும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது தோள்பட்டை, கவசம் பூட்டியதுபோல கம்பீரமாக இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg