Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத ஆலய மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா

In ஆன்மீகம்
Updated: 11:28 GMT, Mar 23, 2016 | Published: 09:59 GMT, Mar 23, 2016 |
0 Comments
1374
This post was written by :

சர்வ மங்களமான மன்மத வருடம் பங்குனித் திங்கள் 10ஆம் நாளான இன்று (புதன்;கிழமை), கண்டி மாவட்டத்தில் உள்ள புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கு குடமுழுக்கு பெருவிழா நடைபெற குருவருள் கூடி நிறைவேறியது.

இந்நிகழ்வு, அமிர்த சித்த யோகமும் பௌர்ணமி திதியும், உத்தர நட்சத்திரமும் கூடிய காலை 9.17 மணிமுதல் 10.45 மணிவரையுள்ள இடப லக்ன சுபமுகூர்த்தத்தில் இடம்பெற்றது.

அதிகாலை 5.30 மணியளவில் வேத பாராயணம், விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசன விஷேட சந்தி, யாக பூஜை, நவாக்னி பூஜை, விஷேட ஹோமம், மஹா பூர்ணாகுதி, அக்னி உத்பவனம், தீபாராதனை, வேத தோத்திர, நிருத்திய கீத, வாத்திய, சர்லாஞ்சலி சமர்ப்பணம், திருமுறை பாராயணம், அந்தர் பலி, பகிர் பலி, கும்ப உத்தாபனம், ராஜகோபுர தூபிகற் அபிஷேகம் என்பவற்றைத் தொடர்ந்து, காலை 9.17 மணி முதல் 10.45 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ கதிர்வேலாயுத பெருமானுக்கு குடமுழுக்கு விஞ்ஞாபனம் நடைபெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg