Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசிக்கான நுகர்வை அதிகரிப்பதே பாண் விலை அதிகரிப்பிற்கு காரணம்

In வணிகம்
Updated: 11:12 GMT, Mar 23, 2016 | Published: 11:12 GMT, Mar 23, 2016 |
0 Comments
1222
This post was written by :

அரசின் நோக்கமாகிய அரிசிக்கான நுகர்வை அதிகரிப்பதன் ஒரு கட்டமாகவே அண்மையில் பாணுக்கான விலை அதிகரிக்கப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மொரட்டுiயில் இடம்பெற்ற நிகழ்வொன்றினையடுத்து ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கான கையிருப்புக்களும் உள்ளது. அரிசிக்கான உற்பத்திச் செலவீனமும் இன்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே எமது விவசாயிகளுக்கு நன்மைகளை வழங்குவது எமது பொறுப்பாகும்.

அரிசியின் நுகர்வினை அதிகரிப்பதன் மூலமே இதனை செய்ய முடியும். அத்துடன் சர்வதேச சந்தைகளில் மாவின் விலை குறைக்கப்பட்டமையும் இத்தீர்மானத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆகவே தான் அரிசியின் நுகர்வினை அதிகரிக்குமாறு விவசாயிகள் ஊடாக முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து அவர்களை தைரியப்படுத்தும் நோக்கிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது’ எனவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg