Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எண்ணெய் உற்பத்தியில் மேலும் வளர்ச்சியை எதிர்பார்க்கும் ஈரான்

In வணிகம்
Published: 11:25 GMT, Mar 23, 2016 |
0 Comments
1224
This post was written by :
Iran oil production

ஈரானின் ஏற்றுமதி தற்போது நாளொன்றுக்கு 2.2 மில்லியன் பீப்பாய்களை எட்டியுள்ள நிலையில், நாட்டின் எண்ணெய் கைத்தொழிலை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஈரானின் முதலாவது துணை ஜனாதிபதி Es’haq Jahangiri, சர்வதேச சந்தையில் ஈரானிய மசகு எண்ணெய்க்கான கேள்வி, நாளொன்றுக்கு 9 இலட்சம் பீப்பாய்களாக எழுச்சி கண்டுள்ளது. எனவே ஈரானின் மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இவ்வருட ஆரம்பத்தில் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதன் பின்னர், கடந்த இரு மாதங்களிலேயே ஈரானின் நாளொன்றுக்கான எண்ணெய் ஏற்றுமதி 2.2 மில்லியன் பீப்பாய்களாக அதிகரித்துள்ளது. அதனை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அதனால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் ஏற்றுமதி தொடர்பில் ஈரான் கொண்டிருந்த இடத்தை மீண்டும் விரைவில் அடைய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் சனிக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், ஈரானின் எண்ணெய் உற்பத்தி கடந்த ஜனவரி மாதத்தில் நாளொன்றுக்கு 3.37 மில்லியன் பீப்பாய்களாக காணப்பட்டதாகவும், இது கடந்த 2014 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாத உற்பத்தி அளவை விட உயர்ந்தளவாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg