Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதட்டின் பராமரிப்பு

In
Updated: 07:03 GMT, Mar 25, 2016 | Published: 07:03 GMT, Mar 25, 2016 |
0 Comments
1353
This post was written by :

உடல் அழகில் ஒருவரின் உதடுகளின் தோற்றமும், அதனைப் பராமரிக்கும் முறையும் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றது. ஒவ்வொரு காலநிலையிலும் அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

சில சமயங்களில் உதடுகளில் ஏற்படும் பாதிப்புக்கள் முகத்தின் அழகையே பெரிய ஒரு குறைபோன்று காட்டும். விட்டமின்கள் குறைபாட்டினால், சிலருக்கு உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். இதுவும் சிலருக்கு பாதிப்பாக இருக்கும்.

அதற்கு அவர்கள் உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், அதிகமாக தண்ணீரும் குடிக்க வேண்டும். குறைந்த பட்சம் தினமும் மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும். இதற்கு பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து படிப்படியாக சிவந்த நிறமாக மாறும். வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச்சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி அதன் தழும்புகள் மாறி உதடுகள் மென்மையாகும்.

உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg