Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நேபாளத்திற்கு பெட்ரோல் விநியோகிக்கவுள்ள சீனா

In வணிகம்
Updated: 09:04 GMT, Mar 25, 2016 | Published: 08:59 GMT, Mar 25, 2016 |
0 Comments
1259
This post was written by :

இதன்பிறகு நேபாளத்திற்கு தேவையான முழுத்தொகைப் பெற்றோலையும் சினா விநியோகிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவுடன் நேபாளம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின் மூலமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

நேபாளத்தில் அண்மையில் புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பின்பு அந்நாடு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், அண்மையில் நேபாள பிரதமர் சர்மா ஒளி சீனாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். அதன்போது, தமது நாட்டிற்கான பெட்ரோல் கொள்வனவுக்காக சீனாவுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டார்.

இந்த புதிய ஒப்பந்தத்தை நேபாளத்தின் அரச எண்ணெய் நிறுவனம் வரவேற்றுள்ளது. எனினும், நேபாளத்தை சுற்றி மலைப்பகுதிகளே இருக்கின்றது. இதனால் பெட்ரோலை தரை மார்க்கமாக கொண்டு வருவது மிகவும் கடினமானது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வளவு காலமும் இந்தியாவில் இருந்தே நேபாளத்திற்கு பெட்ரோல் கொள்வனவு செய்யப்பட்டது. எனினும் அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள இந்திய வம்சாவளி மாதேசிகள் பல போராட்டங்களை நடத்தினர். இதனால் நேபாளத்திற்கான எரிபொருள் உட்பட பல பொருட்களின் வருகை தடைப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்தே, சீனாவுடன் நேபாளம் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg