Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவில் அமெரிக்காவின் கடந்த வருட முதலீடு 12 பில்லியன் டொலர்

In வணிகம்
Updated: 10:11 GMT, Mar 25, 2016 | Published: 10:08 GMT, Mar 25, 2016 |
0 Comments
1280
This post was written by :

இந்தியாவில் அமெரிக்கா கடந்த வருடம் மேற்கொண்ட முதலீடுகளின் மொத்தத் தொகை 12 பில்லியன் டொலர்களாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது 2013ஆம் அண்டுடன் ஒப்பிடும்பொழுது 5 பில்லியன் டொலர்கள் அதிகமாகும்.

கடந்த 2013ஆம் அண்டில் அமெரிக்கா, இந்திய சந்தைகளில் 7 பில்லியன் டொலர்கள் வரை முதலீடு செய்திருந்தது. இந்நிலையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்பொழுது சீனாவில் மேற்கொண்ட முதலீடுகளை விட, அமெரிக்கா இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி, இந்திய நிதிச்சந்தைகளில் 1.8 சதவீதம் அளவுக்கு அமெரிக்க முதலீட்டாளரர்கள் முதலீடுகளை செய்திருந்தனர். எனினும் இதனை விட குறைவாகவே அமெரிக்கா சீனாவில் முதலீடு செய்துள்ளது.

எனினும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா சரிவை சந்தித்து வருவதாக, அண்மையில் செய்திகள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg