Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிவெப்ப வானிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி

In வணிகம்
Updated: 06:25 GMT, Mar 28, 2016 | Published: 06:25 GMT, Mar 28, 2016 |
0 Comments
1249
This post was written by : Shailu

தற்போது நாட்டில் நிலவும் அதிவெப்ப வானிலையால் தேயிலை செய்கையில் நூற்றுக்கு 50 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் லால் பிரேமநாத் கருத்து தெரிவிக்கையில்,

‘இந்த வீழ்ச்சி காரணமாக தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால் சில தேயிலை தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கமானது அரசாங்கத்திடமிருந்து சலுகைகளை எதிர்பார்ப்பதாகவும், பெருமளவு அந்திய செலாவணியை ஈட்டுவதற்கு பங்களிப்பு செய்யும் தேயிலை தோட்ட செய்கையாளர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg