Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பித்த வெடிப்பும் அதிலிருந்து பாதுகாப்பும்

In
Updated: 07:51 GMT, Mar 29, 2016 | Published: 07:51 GMT, Mar 29, 2016 |
0 Comments
1288
This post was written by :

நிம்மதியைக் கெடுக்கும் நோய்களில் ஒன்றுதான் பித்த வெடிப்பு. இதனால், கால்களில் வலி மட்டுமில்லாமல் இன்னும் பலவகையான துன்பங்களைத் தருகின்றது.

தண்ணீரில் மற்றும் ஈரம் அதிகமாக உள்ள இடங்களில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு பின்னங்கால்களிலும், முன்னங்காலில் விரல்களுக்கு நடுவில் சின்னச்சின்னதாகவும் வெடிப்பு வரும். விரலிடுக்கில் வரும் இவ்வாறான வெடிப்பில் அரிப்பும் சேர்ந்து வரும். மழைநீரில் நீண்டநேரம் வேலை செய்யும்போது, ஒருவித பங்கசு காரணமாகவும் கால்களில் வெடிப்புகள் உண்டாகுகின்றன.

பாதங்கள் மற்றும் விரல் இடுக்குகளில் ஏற்படும் பித்த வெடிப்பினை எளிதாக குணப்படுத்தி விடலாம். அதிகளவு நீரில் நின்று பலமணி நேரம் வேலை செய்யும்போது, கால் மற்றும் விரல்களுக்கு உள்ளே தண்ணீர் செல்லாதவாறு நன்றாக மூடி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வேலை முடிந்ததும் கால்களைச் சுத்தமான நீரில் நன்றாக கழுவி ஈரம் போகத் துடைக்க வேண்டும்.

விரல்களுக்கு நடுவில் கொஞ்சமும் ஈரப்பதம் இருக்கக்கூடாது. முன்னங்காலிலும் விரல்களுக்கு நடுவிலும் வியர்வை மற்றும் நீர் தங்காது இருப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். அதெபோன்று இந்த நிலை அதிகமாக இருக்குமாயின் மருத்துவ உதவியை நாடுவது மிகவும் நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg