Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எண்ணெய் உற்பத்தியை தற்போதைய அளவில் நிறுத்தி வைக்கவுள்ள நான்கு நாடுகள்

In வணிகம்
Updated: 08:47 GMT, Mar 29, 2016 | Published: 08:47 GMT, Mar 29, 2016 |
0 Comments
1359
This post was written by :

அரேபியா, கத்தார், ரஷ்யா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் தமது எண்ணெய் உற்பத்தியை தற்போதுள்ள மட்டத்திலேயே நிறுத்தி வைக்க உடன்பட்டுள்ளன. எனினும் ஏனைய எண்ணெய் உற்பத்தியாளர்களும் இதே நிலையில் வைத்திருக்கும் பட்சத்தில்தான் இது அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளன.

சர்வதேச உளவில் மசகு எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாகக் குறைந்திருந்தது. இவ்வாறான ஒரு நிலையிலும், மசகு எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள பல நாடுகள், தமது எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதில்லை என அறிவித்திருந்தன.

இதனால் மசகு எண்ணெய் வநியோகத்தில், அதனை உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் பாரிய சிக்கல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றன. அதேவேளை நாளுக்கு நாள் மசகு எண்ணெய் விலை குறைந்துகொண்டே வருகின்றன.

இவ்வாறான ஒரு நிலையிலேயே தற்பொழுது, எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சமாளிக்கும் நோக்குடன், ரஷ்யா, சவுதி அரேபியா, கத்தார் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இதன்படி, ஜனவரி மாதத்தில் உற்பத்தி செய்த எண்ணெய் அளவிலேயே, தமது உற்பத்தியை வைத்திருக்கப்போவதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg