Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் நிதியுதவியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய முனையம்

In வணிகம்
Updated: 09:54 GMT, Mar 29, 2016 | Published: 09:54 GMT, Mar 29, 2016 |
0 Comments
1352
This post was written by :

ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு புதிய முனையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசு வழங்கவுள்ளது. இந்த கடன் தொடர்பான விதிமுறைகள் கொண்ட அறிக்கை ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் மூலம் நேற்று வெளியிடப்பட்டன.

இந்த அறிக்கையின்படி, குறித்த கடன் தொகை 40 வருடங்களில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். அதேபோன்று, ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கு 0.1 சதவீதம் என்ற அடிப்படையில் இக்கடனுக்கான வட்டியையும் இலங்கை ஜப்பானுக்கு செலுத்த வேண்டும்.

இந்த புதிய முனையத்தின் தயாரிப்பு திட்டத்தில், சூரிய சக்தியை பயன்படுத்தல் மற்றும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தல் போன்ற திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த திட்டத்தின் பணிகள் அனைத்தும் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு, 2020 ஆம் ஆண்டு புதிய முனையம் திறக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஆற்றலை ஆண்டுதோறும் 15 மில்லியன் பயணிகள் கையாளக்கூடிய வகையில் இரட்டிப்பாக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg