Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொட்டால் சுருங்கியின் மருத்துவக் குணங்கள்

In
Updated: 05:33 GMT, Mar 30, 2016 | Published: 05:33 GMT, Mar 30, 2016 |
0 Comments
1241
This post was written by : Shailu

மருத்துவ குணங்கள் கொண்ட பல தாவரங்களில் தொட்டால் சுருங்கி தாவரமும் முக்கிய இடம் வகிக்கிறது என்ற போதும், அதன் நன்மைகள் பலருக்கு தெரியாது.

அந்த வகையில், நீண்ட நாள் மேனியில் காணப்படும்; படை, தேமல் போன்ற நோய்களுக்கு, தொட்டால் சுருங்கி இலையை பறித்து, அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்.

குழிப்புண் குணமாக இவ்விலையைப் பறித்து வந்து சுத்தம் செய்து, உள்ளங்கையில் வைத்துக் கசக்கி, அதில் இருந்து வரும் சாற்றை உடலில் ஏற்பட்டுள்ள குழிப்பண்ணீல் விடுவதோடு கொஞ்சம் இலையையும் அந்தப்புண்ணின் மீது கசக்கி வைத்து தூய்மையான துணியால் கட்டி வந்தால் சில நாட்களிலேயே குழிப்புண் குணமாகும்.

சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் அப்படி செய்வதால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும்.

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்றுப்புண்ணும் ஆறும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg