Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உர மானியத்திற்குப் பதிலீடாக காசோலை : தரவு சேகரிக்கும் திட்டம் தீவிரம்

In வணிகம்
Updated: 06:31 GMT, Mar 30, 2016 | Published: 06:30 GMT, Mar 30, 2016 |
0 Comments
1193
This post was written by : Shailu

விவசாயிகளின் நலன் கருதிக் கொண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள உர மானியத்திற்குப் பதிலீடாக காசோலை வழங்கும் வேலைத் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்பான தரவு சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியாகவுள்ள கமநல மத்திய நிலையங்களில் இந்த நடவடிக்கை இடம்பெறுகிற நிலையில், விவசாயிகள் தமது நெற்செய்கை தொடர்பான சகல விபரங்களையும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பிரதேசத்திலுள்ள கமநல மத்திய நிலையங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விவசாய அமைச்சு, சகல கலநல உத்தியோகத்தர்களுக்கும் கடிதம் மூலமாக அறிவித்துள்ள நிலையில் விவசாயம் தொடர்பில் சரியான தகவல்களை வழங்காத விவசாயிகளுக்கு மானிய அடிப்படையிலான உரமானியத்திற்கான காசோலை வழங்கப்படுவதில் சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன் காரணமாக, விவசாயிகள் தொடர்பான தகவல்கள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg