Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதி வெப்பநிலையால் மரக்கறி வகைகளின் விலை இரட்டிப்பாக அதிகரிப்பு

In வணிகம்
Updated: 07:45 GMT, Mar 30, 2016 | Published: 07:03 GMT, Mar 30, 2016 |
0 Comments
1212
This post was written by : Shailu
vegetables

இலங்கையில் நிலவும் அதி வெப்பநிலை காரணமாக தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒருசில மரக்கறி வகைகளின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

அதி வெப்ப நிலையால் ஏற்பட்ட வரட்சியே மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளமைக்கும், விலையேற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

கிணற்று நீரை பயன்படுத்தி மரக்கறி செய்கைகளை முன்னெடுக்கும் பாரிய சவாலுக்கு விவசாயிகள் கடும் முகம் கொடுத்துள்ளனர். இருப்பினும் அதனை போன்று ஏனைய பகுதிகளிலும் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்ற மரக்கறியின் அளவும் வெகுவாக குறைவடைந்துள்ளதால், வழமைக்கு மாறாக மீண்டும் மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்தோடு இந்த நிலை தொடர்ந்தால் பண்டிகை காலத்தில் பாரிய பாதிப்புக்களை எதிர் நோக்க நேரிடும் எனவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg