Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலாக்காய் பொறியல்

In
Published: 10:30 GMT, Mar 31, 2016 |
0 Comments
1284
This post was written by :
Palakkai poriyal

தேவையான பொருட்கள்
பலாக்காய் – 1 (நடுத்தர அளவு)
வெங்காயம் – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு

செய்யும் முறை
நடுத்தர அளவு பலாக்காயை எடுத்து மேலே துண்டித்து அதன் தோலை உரிக்க வேண்டும். அதை இரண்டாக வெட்டி சின்ன துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவி, பின்னர் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், பலாக்காய், உப்பு, மஞ்சள் தூள் என்பவற்றைத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். பின் ஒரு மூடி போட்டு நன்றாக வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு பொறிக்கவும். வெந்த பலாக்காயை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் என்பவற்றை சேர்த்து பொன்நிறம் ஆகும் வரை வறுத்து எடுத்தால், பலாக்காய் பொறியல் தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg