Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் தலைச்சிறந்த 5 முனையங்களில் கொழும்பு துறைமுகத்தின் SAGT

In வணிகம்
Updated: 13:32 GMT, Mar 31, 2016 | Published: 13:24 GMT, Mar 31, 2016 |
0 Comments
1119
This post was written by :

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற South Asia Gateway Terminals என்றழைக்கப்படும் SAGT நிறுவணத்தின் கொள்கலன்கள் முனையம் உலகின் தலைச்சிறந்த 5 தனியார் முனையங்களுள் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் முன்னனி வர்தக சஞ்சிகையினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்விற்கமைவாக SAGT கொள்கலன்கள் முனையம் ஒலக அளவில் நான்காமிடத்தையும் ஆசிய அளவில் முதலாமிடத்தை பெற்றுள்ளது. இம்முனையத்தில் ஒரு மணித்தியாலத்தினுள் 34 கிரேன்களை உபயோகித்து சுமார் 113 அளவிலான கொள்கலன்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கின்றன.

சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஈட்டிக்கொண்ட இவ்வெற்றியை முன்னிட்டு SAGT நிறுவணத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி டெட் முத்தையா சந்தைப்படுத்தல் மற்றும் விற்பணை முகாமையாளரான டாஷ்மா கருணாரத்ன ஆகியோர் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவிற்கு நினைவுச் சின்னமொன்றை கையளித்தார்கள்.

உலக சந்தையில் இலங்கை வெற்றிகரமான கொள்கலன்கள் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமையினை நினைவுக்கூறுமுகமாகவே இந்நினைவுச் சின்னம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் பொழுது கருத்துரைத்த அமைச்சர் அர்ஜீன ரணதுங்க ‘இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை உலகிற்கு எடுத்துரைக்கின்ற விசேட சந்தர்பமாக நான் இவ்வெற்றியை கருதுகின்றேன்’ என்று தெரிவித்தார்.

உலகின் தலைச்சிறந்த 5 முனையங்கள்

   முனையம்                                         துறைமுகம்                            நாடு                  கொள்கலன் செயற்பாடுகள்
1 Xiamen Songyu                                    சியாமென்                               சீனா                                            131

2 APM Terminals                               யொக்கோஹோமா              ஜப்பான்                                          121

3 Tianjin Five Continents Int’l            டியன்ஜின்                                சீனா                                                119

4 SAGT                                                     கொழும்பு                             இலங்கை                                       113

5 DP World Jebel Ali                             ஐக்கிய                                 அரபு ராஜ்ஜியம்                              112

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg