Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்தானி மெட்டியை கொண்டு கருவளையங்களைப் நீக்குவது எப்படி?

In
Published: 09:16 GMT, Apr 1, 2016 |
0 Comments
1491
icon_com
This post was written by : Anojkiyan
multani-mitti

முல்தானி மெட்டி மற்றும் வெள்ளரிக்காய் சாறு : முல்தானி மெட்டி பொடியை வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, கருவளையம் மற்றும் முகத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

முல்தானி மெட்டி மற்றும் பாதாம் : முல்தானி மெட்டி பொடியுடன், பாதாம் பொடி மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ, முகம் மற்றும் கண்கள் பொலிவுறும்.

முல்தானி மெட்டி மற்றும் பால் : பால் ஈரப்பசையை அதிகரித்து, திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முல்தானி மெட்டி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை முல்தானி மெட்டி பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

முல்தானி மெட்டி மற்றும் தயிர் : முல்தானி மெட்டியுடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, சோர்வடைந்த கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருமையும் அகலும்.

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை : சருமத்தில் உள்ள கருமையை எலுமிச்சை மிகவும் எளிதில் நீக்கும். அத்தகைய எலுமிச்சை சாற்றினை முல்தானி மெட்டி பொடியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வோட்டர் : ரோஸ் வோட்டரில் உள்ள உட்பொருட்கள் சரும செல்கள் புத்துணர்ச்சி அடையச் செய்யும். எனவே முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வோட்டருடன் சேர்த்து பேஸ் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, கருவளையம் மட்டுமின்றி, சருமத்தில் உள்ள சுருக்கங்களும் அகலும்.

முல்தானி மெட்டி மற்றும் உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, முல்தானி மெட்டி பொடியுன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் கருவளையங்கள் விரைவில் மறையும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg