Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!

In வணிகம்
Updated: 12:44 GMT, Apr 1, 2016 | Published: 12:43 GMT, Apr 1, 2016 |
0 Comments
1186
icon_com
This post was written by : Anojkiyan
sri-lanka-rupee-vs-us-dollar

கடந்த சில நாட்களாக தொடர் வீழ்ச்சியை எதிர்கொண்டுவந்த ரூபாயின் பெறுமதி, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகரித்துள்ளது.

அந்த வகையில் இலங்கை மத்திய வங்கியினால் கடந்த வாரம் மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதத்தின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 146.52 ரூபாவாக காணப்பட்டதுடன் அதன் விற்பனை பெறுமதி 150.54 ரூபாவாக காணப்பட்டது.

இது ஒரு அமெரிக்க டொலர் 150 ரூபாவின் பெறுமதிக்கு நிகராகும். மேலும் இது இலங்கையின் வரலாறு காணாத நாணயப் பெறுமதி வீழ்ச்சியாகும்.

இந்நிலையில் இன்று இலங்கையின் ரூபா மதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் டொலரின் பெறுமதி 147 ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்று ரூபா அளவில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg