Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சருமத்தில் உள்ள கருமையை நீக்க எலுமிச்சை ஃபேஷியல்!

In
Updated: 10:17 GMT, Apr 2, 2016 | Published: 10:16 GMT, Apr 2, 2016 |
0 Comments
1261
icon_com
This post was written by : Anojkiyan
Lemon-Pack

படிமுறை 1 : முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, காட்டனைக் கொண்டு முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

படிமுறை 2 : பின் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, காட்டனை இக்கலவையில் நனைத்து முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

படிமுறை 3 : அடுத்து 2 டீஸ்பூன் சர்க்கரையில், 1ஃ2 எலுமிச்சை பழத்தை பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் ஒலிவ் ஒயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் இக்கலவை முகத்தில் தடவி 2 நிமிடம் விரல்களால் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

படிமுறை 4 : பிறகு ஒரு எலுமிச்சை ஃபேர்னஸ் மசாஜ் க்ரீம்மை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்த வேண்டும். அதற்கு 2 டீஸ்பூன் ஷியா வெண்ணெயை குறைவான தீயில் சூடேற்றி, நன்கு உருகியதும் அதனை இறக்கி அதில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து காற்றுப் புகாத டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி, பின் இந்த க்ரீம்மை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்யவும். பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

படிமுறை 5 : இறுதியில் 2-3 அன்னாசி துண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி மற்றும் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

குறிப்பு : இந்த எலுமிச்சை ஃபேஷியலை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, முகம் நன்கு பொலிவோடும், இளமையுடனும் காட்சியளிக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg