Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

UTE இன் பயிற்சி நிலையத்துக்கு பெருமைக்குரிய சேவைப் பயிற்சி சிறப்பு விருது

In வணிகம்
Updated: 10:46 GMT, Apr 2, 2016 | Published: 10:44 GMT, Apr 2, 2016 |
0 Comments
1106
icon_com
This post was written by : Anojkiyan
UTE

யுனைட்டட் டிராக்டர்ஸ் அன்ட் எக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட்டின் பயிற்சி நிலையத்துக்கு வணிக பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், நிபுணர்கள், தனியார் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள், கட்டர்பில்லர் பிரதிநிதிகள், விநியோகஸ்த்தர்கள் மற்றும் வணிக போட்டியாளர்கள் என பலரின் வரவேற்புக் கிடைத்துள்ளது.

இந்த புகழ்பெற்ற UTE இன் பயிற்சி நிலையத்துக்கு கட்டர்பில்லர் நிறுவனத்திடமிருந்து அண்மையில் பெருமைக்குரிய சேவைப் பயிற்சி சிறப்பு விருது (STEAA) வழங்கப்பட்டிருந்தது.

இந்த விருது, UTE இன் பயிற்சி முகாமையாளர் நிஹால் ஜயமஹாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதை, கட்டர்பில்லரின் முன்னாள் மாவட்ட முகாமையாளர் கெவின் ஸ்ட்ரைடெம் வழங்கியிருந்தார். இந்நிகழ்வில் கட்டர்பில்லர் பிராந்திய முகாமையாளர் தோமஸ் தியோ மற்றும் கட்டர்பில்லர் (பெங்களூர்) மாவட்ட முகாமையாளர் ஈ.சி.மனோஹர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கட்டர்பில்லரின் உலக தராதரங்களுக்கமைய, உயர் பெறுமதி வாய்ந்த பயிற்சிகள் வழங்குவதற்கான இயலுமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த கடுமையான மதிப்பீடுகளைத் தொடர்ந்து இந்த பெருமைக்குரிய விருது வழங்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த சேவைப் பயிற்சிகளை வழங்குவதற்கான சிறப்பு நிலையை வழங்குவதற்கு கடுமையான மதிப்பீடுகள், கட்டமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தல்கள் மற்றும் நிலையத்தின் மீளாய்வுகள் போன்றன கட்டர்பில்லர் அணியின் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கட்டர்பில்லர் வலுப்பிறப்பாக்கிகள் (Power Generators) மற்றும் பாரம் தூக்கி ட்ரக்கள் (Lift Trucks) ஆகியவற்றை இலங்கையில் விநியோகிக்கும் அங்கீகாரம் பெற்ற ஒரே விநியோகஸ்த்தராக ருவுநு திகழ்கிறது. அத்துடன், கட்டர்பில்லர் நிர்மாண மற்றும் Earthmoving தயாரிப்புகளின் விநியோகஸ்த்தராகவும் அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg