Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டிராகன் ஃபுரூட் ஜூஸ்

In
Updated: 13:11 GMT, Apr 2, 2016 | Published: 13:10 GMT, Apr 2, 2016 |
0 Comments
1378
icon_com
This post was written by : Anojkiyan
dragonfruit-bright-web1

நாம் அனைவருக்குமே டிராகன் பழம் தெரியும். ஆனால் இதை பலரும் வாங்க தயக்கப்படுகின்றனர். காரணம். இதை எப்படி சாப்பிடுவது என்பத தெரியாமையே ஆகும். ஆனால் அதிக சத்துக்கள் உள்ளன.

அதிலும் டிராகன் பழத்தைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். இங்கு டிராகன் ஃபுரூட் ஜூஸ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

டிராகன் பழம் – 1 கப் (நறுக்கியது)
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
ஐஸ் கட்டி – தேவையான அளவு
குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை

டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும். பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃபுரூட் ஜூஸ் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg