Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறால் வடை

In
Updated: 04:02 GMT, Apr 3, 2016 | Published: 04:01 GMT, Apr 3, 2016 |
0 Comments
1216
icon_com
This post was written by : Shailu
Prawn Vadai

தேவையான பொருட்கள்

இறால் – 1 கப்
தேங்காய் துருவியது – 1 கப்
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவைக்கு
வெங்காயம் – 2
மிளகு தூள் – 1ஃ2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அத்தோடு இறால்களையும் சுத்தம் செய்தபின் அரைத்து கொள்ளவும்.

பின்னர் ஒரு சிறிய பாத்திரத்தில் அரைத்த மசாலாவுடன் அரைத்த இறாலை போட்டு உப்பு, மிளகுதூள் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இறால் மசாலாவை வடைகளாக தட்டி பொரித்தெடுத்தால் இறால் வடை ரெடி….!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg