Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளநரையை போக்க சில டிப்ஸ்

In
Updated: 07:24 GMT, Apr 3, 2016 | Published: 07:24 GMT, Apr 3, 2016 |
0 Comments
1197
icon_com
This post was written by : Shailu
hair

இன்றை கால கட்டத்தில் இள சமூதாயத்தினர் எதிர்நோக்குகின்ற பிச்சினைகளில் ஒன்று தான் இள நரை. இதற்கு செயற்கை பொருட்களினால் எந்த ஒரு தீர்வும் கிடைக்காது. எனவே மிகவும் எளிய இயற்கை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் தீர்வினை  பெற்றுக் கொள்ளலாம்

*தினமும் தலைக்குளித்தலை தவிர்த்து வாரத்தில் இருநாட்களை தேர்வு செய்து தலை குளிக்கலாம். இதனால் செம்பட்டை நிறத்தில் தோன்றுவது தவிர்க்கப்படும்.

*பித்தத்தால் ஏற்படும் இளநரையைப் போக்குவதற்கு அதிகமாக கொத்தமல்லியை உணவில் சேர்க்கவேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் மல்லித்தூள்(தனியா) கோபி வைத்து குடிக்கவேண்டும்.

*கீழாநெல்லியை நல்லெண்ணையுடன் கலந்து காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தடவி வர வெண்முடி குறைந்த கருமை வளரும்.

*கறிவேப்பிலை தான் வெள்ளை முடியை அகற்ற சரியான வழி. தினமும் கறிவேப்பிலை துவையல் செய்து சாப்பிடலாம். கறிவேப்பிலை நன்கு அரைத்து வேர்களில் தடவி வந்தால் விரைவில் முடிக்குத் தேவையான போஷாக்கு கிடைத்துவிடும். கருமுடி வளர ஆரம்பிக்கும்.

*எல்லோருக்கும் நெல்லிக்காயைத் தெரியும். ஆனால் யாரும் அதன் பலன்களை அறிந்திருக்க மாட்டார்கள். தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுவதால் நரை முடி மற்றும் சகல முடிப்பிரச்சினைகள் மட்டுமின்றி உடலில் உள்ள சரும பிரச்சினைகள் மற்றும் கால்சியம் சத்துக்குறைவு போன்ற அனைத்து பிரச்சினைகளும் சரியாகிவிடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg