Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோய் தீர்க்கும் பதநீர்

In
Updated: 08:21 GMT, Apr 3, 2016 | Published: 08:21 GMT, Apr 3, 2016 |
0 Comments
1193
icon_com
This post was written by : Shailu
padhaneer

நம் நாட்டில் பெரிய அளவில் பதநீர் உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது எனலாம். இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்டசத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள்.

தொழு நோயை நீங்க :- நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனை ஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை:- மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, கட்டி முதலியவற்றினால் பெண்கள் அவதிபடுவார்கள் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு:- வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு மூல சூடு தணியும்.

அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண்,வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும் .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg