Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை முதலீட்டு சபையால் 16 புதிய வேலைத்திட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்து

In வணிகம்
Updated: 10:59 GMT, Apr 3, 2016 | Published: 10:56 GMT, Apr 3, 2016 |
0 Comments
1133
icon_com
This post was written by : Shailu
agreements

இலங்கை முதலீட்டு சபை இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 16 புதிய வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக 110 மில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீட்டு திட்டம் ஒன்றும் அமுலாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வேலைத்திட்டங்களின் ஊடாக, ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிய மின்னுற்பத்தி நிலையங்கள், சுற்றுலா விடுதி, தொடர்மனை குடியிருப்பு மற்றும் ஆடைத்தொழிற்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் இந்த உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அவற்றில் மின்னுற்பத்தி நிலையங்கள் இரத்தினபுரி, பதுளை, மாத்தளை மற்றும் ஹாலிஎல பிரதேசங்களுக்கு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg