Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்கண்டு வடை

In
Published: 07:07 GMT, Apr 5, 2016 |
0 Comments
1223
icon_com
This post was written by :
கல்கண்டு-வடை

தேவையான பொருட்கள்
உளுந்து – 1 ½ கப்
பச்சரிசி – 2 மேசைக்கரண்டி
கல்கண்டு – ஒரு கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்யும் முறை
பச்சரிசியையும் உளுந்தையும் ஒன்றாக சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். முக்கால் பதம் அரைத்தவுடன் பொடித்து வைத்த கல்கண்டை சேர்த்துக் கரைக்கவும். உளுந்தை அரைக்கும்போது, சிறிதும் தண்ணீர் சேர்க்கக் கூடாது. அரைத்து முடித்ததும் மாவு நீர்க்க இருப்பது போல் தெரிந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யை சூடாக்கி, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும். வேக வைக்கும்பொழுது தீயை மிதமாக எரிய விட வேண்டும். கல்கண்டு சேர்ப்பதால், தீ அதிகமாக எரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg