Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோடை காலங்களில் முதியவர்கள் எடுக்க வேண்டிய உணவுகள்

In
Published: 07:31 GMT, Apr 5, 2016 |
0 Comments
1260
icon_com
This post was written by :
Elders

கோடை காலங்களில் முதியவர்கள், தமது உணவிலும், நீர் மற்றும் சாதாரண குளிர்பானங்களை எடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சூடான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுதல் மிகவும் நல்லது. பூசணிக்காய், வெள்ளரி, சுரைக்காய், தர்பூசணி, இளநீர், நுங்கு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மணத்தக்காளி, வெந்தயக் கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். அதேபோன்று, கொத்தமல்லி, புதினா போன்றவற்றைத் துவையலாகச் செய்து சாப்பிடுவதும் நல்லது.

கோடை காலங்களில் கோப்பி, பால் தேனீர், காரமான குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை குடிப்பதைவிட, ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை நீர்மோர் குடிப்பது நல்லது.

அதிக அளவு பழங்களை எடுத்துக் கொள்ளுவதன்மூலம் தாகத்தைத் தணிப்பதுடன், நோய் எதிர்ப்புச் சக்தியையும் உடலுக்குத் தரும். ஒரே வகையான உணவையே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்காமல், தினமும் விதவிதமான நிறத்தில் இருக்கும், பல்வேறு வகையான காய்கறிகளை, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கல்லீரல், சிறுநீரகம், இதயம் நன்றாக இயங்கக்கூடிய முதியவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg