Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடி உதிரும் பிரச்சினைக்கு இயற்கை தீர்வு

In
Updated: 07:41 GMT, Apr 5, 2016 | Published: 07:41 GMT, Apr 5, 2016 |
0 Comments
1245
This post was written by :

முடி உதிர்கின்றது என்று கவலைப்படுபவர்கள் சிலருக்கு இயற்கையாகவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் முறைகள் தெரியாமல் இருக்கும். கீழே உள்ள இயற்கை முறைகளின் மூலம் முடியை ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

பீர்க்கங்காயின் தோலை நீக்கி விட்டு சதைபகுதியில் சில துண்டுகளை தேங்காய் எண்ணெயில் போட்டு எண்ணெய் கருப்பாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின் அதை இறக்கி குளிர வைத்து, தினமும் ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது படிப்படியாக குறையும்.

அதேபோன்று, சீமைச்சாமந்தி பொடியை வாங்கி நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி மீண்டும் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இந்த செயலை கிழமையில் 2 முறை தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடி வலிமையடையும். மேலும், முடி கொட்டுவதும் படிப்படியாக குறையும்.

சுரைக்காயை அரைத்து அதன் சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கத்தை அலச வேண்டும். இதனால் தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகரித்திருப்பதைக் மிக விரைவிலேயே காணலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg