Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீடியோகோன் ஸ்பெக்ட்ரத்தை கொள்வனவு செய்துள்ள எயாடெல்

In வணிகம்
Published: 08:21 GMT, Apr 5, 2016 |
0 Comments
1193
icon_com
This post was written by :
Airtel AND VIDEOCON

வீடியோகோன் டெலிகொம் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் 4428 கோடி ரூபாவுக்கு பார்தி எயாடெல் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோகோன் நிறுவனத்தின் 1800 மெகாஹேர்ட்ஸ் அளவு ஸ்பெக்ட்ரம் பார்தி டெலிகொம் கையகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தற்போது இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு அடுத்ததாக ஸ்பெக்ட்ரம் சேவையில் அதிக வலிமையுடன் இருக்கும் நிறுவனம் ஏர்டெல் உள்ளது.

தற்போது பீகார், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசத்தின் வடக்கு, மற்றும் மேற்கு மற்றும் குஜராத் ஆகிய 6 பகுதிகளுடைய ஸ்பெட்ரமை வீடியோகோனிடமிருந்து எயாடெல் தன்வசப்படுத்தியுள்ளமையினால் எயாடெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் எயாடெல் நிறுவனத்தின் சேவை வட்டம் 15இலிருந்து 19 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg