Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பச்சைப் நிற வாழைப்பழத்தில் இவ்வளவு சத்துகளா?

In
Updated: 12:27 GMT, Apr 6, 2016 | Published: 12:26 GMT, Apr 6, 2016 |
0 Comments
1289
This post was written by : Anojkiyan

பொதுவாக பச்சைப் நிற பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக பச்சைப் நிற வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

அதிலும், குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக உருவாகும் குடல்புண் என்கிற அல்சர் நோயை இந்த பழங்கள் குணமாக்க வல்லது.

பச்சை நிற வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் இதனை சாப்பிடலாம்.

இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

மஞ்சை வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது, ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்பதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதில் விட்டமின் டீ6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது, மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் டீ6 அவசியமான ஒன்றாகும்.

விட்டமின் டீ6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg