Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காய்கறி மிளகு அவல்

In
Updated: 07:18 GMT, Apr 7, 2016 | Published: 07:17 GMT, Apr 7, 2016 |
0 Comments
1214
icon_com
This post was written by :
காய்கறி-மிளகு-அவல்

தேவையான பொருட்கள்
சிவப்பரிசி அவல் – 2 கப்
காய்கறிக் கலவை – 1 கப் ( கரட், போன்ஜி, காலிஃப்ளவர் பட்டாணி)
பெரிய வெங்காயம் – 1
கருவேப்பிலை – 1 பிடி
எலுமிச்சைச்சாறு – அரை தேக்கரண்டி
மிளகு – 10
கொத்துமல்லித்தழை – 1 தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
எண்ணெய் / வெண்ணெய் – தலா ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி

செய்யும் முறை
சிவப்பரிசி அவலைச் சுத்தம் செய்து களைந்து வைக்கவும். பெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடிப்பொடியாக நறுக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து, அதில் சிவப்பரிசி அவல போட்டு வெடித்ததும், உளுந்து போட்டு சிவந்ததும் கருவேப்பிலை, பெரிய வெங்காயம், காய்கறிக்கலவை போட்டுத் தாளிக்கவும்.

வதங்கும் காய்கறிக்கலவை மீது வெண்ணெயைப் போடவும். நன்கு வதக்கி மூடி வைத்து இரண்டு நிமிடம் கழித்துத் திறந்து உப்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஊறிய அவலையும் சேர்த்து நன்கு கிளறி கொத்துமல்லித்தழை தூவி மிளகைப் பொடித்துப் போட்டு இறக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg