Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டாடா குழும உரிமையாளரை சந்தித்த இங்கிலாந்து வணிக அமைச்சர்

In வணிகம்
Updated: 12:12 GMT, Apr 7, 2016 | Published: 08:55 GMT, Apr 7, 2016 |
0 Comments
1244
icon_com
This post was written by :

இங்கிலாந்தின் உருக்கு உற்பத்தித் துறையில் இருந்து டாடா நிறுவனம் வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், டாடா குழுமத்தின் தலைவர் Cyrus Mistry உடன் இங்கிலாந்து வணிக அமைச்சர் சாஜித் ஜவீட் நேரில் சென்று சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்தியாவின் மும்பை நகரில் உள்ள டாடா குழுமத்தின் தலைமை அலுவகத்தில் நேற்று (புதன்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, டாடா நிறுவனம் தமது உருக்கு உற்பத்தியை இங்கிலாந்தில் நிறுத்திக் கொள்வதாக தெரிவித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

டாடா நிறுவனத்தின், இங்கிலாந்தில் உள்ள உருக்கு தொழிற்சாலையில் கடந்த சில காலங்கலாக ஏற்பட்ட தொடர் நட்டத்தின் காரணமாக, தாம் அந்நிறுவனத்தை விற்கவுள்ளதாக தெரிவித்தது. மேலும், அந்நாட்டில் தமது வணிகத்தை முடித்துக் கொள்வதாகவும் டாடா குறிப்பிட்டிருந்தது.

எனினும் டாடா நிறுவனம் இவ்வாறு செய்யுமாயின், அது அங்குள்ள 15,000 ஊழியர்களின் தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ஒரு அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது இங்கிலாந்தின் பொருளாதாரத்திலும் பெரிய தாக்கத்தை செலுத்தும் என்று அஞ்சப்படுகின்றது.

டாடா நிறுவனம் இங்கிலாந்தின் மிகப்பெரிய அளவில் உருக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg