Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாம் ஏன் தினமும் கோவிலுக்கு செல்கின்றோம்?

In ஆன்மீகம்
Updated: 10:32 GMT, Apr 8, 2016 | Published: 10:31 GMT, Apr 8, 2016 |
0 Comments
1275
icon_com
This post was written by :
995316477

வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு புகழ் பெற்ற நாடு நம் இந்தியா. இந்த நாடு முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கெல்லாம் எண்ணற்ற இந்து கோவில்கள் உள்ளது. பெரும்பாலான மக்கள் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக கோவில்களுக்கு வருகை தருகிறார்கள். இருப்பினும், வெகு சிலரே கோவில்களுக்கு செல்வதற்கு பின்னணியில் உள்ள விஞ்ஞான பூர்வமான காரணத்தைத் தெரிந்து வைத்துள்ளனர்.

கோவில்களுக்கு செல்வதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது, இத்தகைய புனிதமான இடங்களில் கிடைக்கும் நேர்மறையான ஆற்றல் திறன்கள் அனைத்தையும் உறிஞ்சிடவே. மேலும், நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் முனைப்புடன் செயல்படும் போது மட்டுமே இந்த நேர்மறையான ஆற்றல் உறிஞ்சப்படும். இந்த ஐம்புலன்கள் கோவிலுக்குள் உள்ள எண்ணிலடங்கா செயல்கள் மூலம் தூண்டப்படலாம்.

கடவுள் சிலைக்கு மலர்களால் அர்ச்சனை செய்வதற்கான காரணம்

பூக்கள் என்பது மென்மையாகவும், தூய்மையானதாகவும், நல்ல நறுமணத்துடனும் இருக்க கூடியவை. அதனை நாம் கோவிலில் உள்ள கடவுளுக்கு படைக்கிறோம். இருப்பினும், திடமான நறுமணத்தை கொண்ட சில மலர்களை மட்டுமே கடவுளுக்கு அர்பணிக்க முடியும். உதாரணத்திற்கு ரோஜா, மல்லிகை, சாமந்தி போன்றவைகள். பூக்களின் நறுமணம், ஊதுபத்தி மற்றும் கற்பூரத்தின் நறுமணம் ஒன்றாக சேர்ந்து உங்களின் வாசனை உணர்வை முனைப்பாக்கும்.

கோவிலின் கட்டமைப்பு மற்றும் இருப்பிடத்திற்கு பின்னணியில் உள்ள காரணம்

எப்போதுமே அளவுக்கு அதிகமான நேர்மறை ஆற்றல் திறன்களால் சூழப்பட்டுள்ள இடத்தில் கோவிலின் இருப்பிடம் இருக்கவே விருப்பப்படுகிறது. வடக்கு இறுதியில் இருந்து தெற்கு இறுதிக்கு காந்த மற்றும் மின்சார அலைகள் சுலபமாக பாயும் இடம் தான் கோவிலுக்கான சிறந்த இடமாகும்.

கடவுளின் சிலை

கோவிலின் இதயப்பகுதியான மூலஸ்தானம் அல்லது கர்ப்பகிரகத்தில் தான் கடவுளின் சிலை வைக்கப்படும். மூலஸ்தானத்தில் தான் பூமி அதிகபட்சமான காந்த அலைகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. சிலையை வைத்த பிறகு தான் கோவிலின் கட்டமைப்பு எழுப்பப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg