Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் ஸ்டைல் மலபார் சிக்கன் ரோஸ்ட்

In
Updated: 10:47 GMT, Apr 8, 2016 | Published: 10:46 GMT, Apr 8, 2016 |
0 Comments
1187
icon_com
This post was written by : Anojkiyan
chik

நீங்கள் சிக்கனை பலவிதமாக சமைத்து சுவைத்து உங்களுக்ககு போர் அடித்திருக்கும். இனியெனும் உங்களுக்கு சிக்கனை புதுவிதமாக சமைக்க நீங்கள் எண்ணினால். இந்தியன் ஸ்டைல் மலபார் சிக்கன் ரோஸ்ட்டை செய்யுங்கள் இது மிகவும் அருமையாக இருக்கும்.

சரி, உங்களுக்கு மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரியவில்லையா? கவலை வேண்டாம். இங்கு மலபார் சிக்கன் ரோஸ்ட் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைசெய்து பார்த்து சுவைத்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

சிக்கன் லெக் பீஸ் – 6
வெங்காயம் – 20
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
தேங்காய் எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சிக்கன் ஊற வைப்பதற்கு…

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோள மாவு – 2 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
எலுமிச்சை – 1

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கன் லெக் பீஸை நீரில் சுத்தமாக கழுவி, அதில் ஆங்காங்கே கத்தியால் கீறி விட வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் லெக் பீஸை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து எடுக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்கவும். பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், மலபார் சிக்கன் ரோஸ்ட் ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg