Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயிரம் மெற்றிக்தொன் மேலதிக நெல்லை கொள்வனவு செய்ய அனுமதி

In வணிகம்
Published: 11:16 GMT, Apr 8, 2016 |
0 Comments
1179
icon_com
This post was written by :
batticaloa_faddy_002-720x480

வவுனியா மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் மேலும் ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசின் அனுமதி கிடைத்துள்ளது என வவுனியா கமநல சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை வவுனியா மாவட்டத்திற்கான நெல் கொள்வனவு அளவை அதிகரிக்குமாறு நொச்சுமோட்டை கமக்காரர் அமைப்பு வவுனியா கமநல சேவைகள் உதவி ஆணையாளரின் ஊடாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரால் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசனிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய வவுனியா மாவட்டத்தில் மேலும் ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லை உரிய திகதியின் பின்னரும் அரசினால் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் எதிர்வரும் 26ஆம் திகதிக்கு பின்னர் மேலதிக ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் வவுனியாவில் மேலும் 50 விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசினால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் 3 ஆயிரம் மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும் விவசாயிகளின் நலன் கருதி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக 3 ஆயிரத்து 600 மெற்றிக்தொன் நெல் இதுவரை காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg